රාත්රියේදී , අත් නොහැරුන
දසදහස් ගනන් දහවල් වලින් එකක් නැගී එයි…..
කඳු එලි පෙහෙලි කර
තේ දළු වල බීජ වැපිරූ
මගේ ජනතාවගේ නොනැගුනු හඬ
නිහඬ නිශ්ශබ්දතාව,
කඳුකරය රජ කරන නිලතල දරන අධිකාරී පැලැන්තිය
අපේ පැල්පත් මත දුක් ගින්දර තබන විට,
අපේ භූමියේ ප්රචණ්ඩ හඬින් සැරිසරන විට,
පහත් බසින් අප අමතන විට
පැල්පතේ ගින්න අප තුළද පැතිර යයි ….
බල තණ්හාවේ හඬින්
මැතිරුණ නූල් අරගෙන
අගුලු දැමු මාoචු කඩා ,
විමුක්තියේ හඬින් පිරිමැදුනු
ගිනි කූරු වල අග වැදී
මහා පිපිරීමකින් බිඳ වැටෙයි ,
අපේ නිහඬබව, නිශ්ශබ්දතාවය ….
———————————–
மௌனம் அவிழ்கின்றபோது
- மு.கீர்த்தியன்
இரவினின்றும் விடுபடாத
ஆயிரமாயிரம் பகலிலொன்று
சுலித்தபடி புலர்கிறது
மலைகளை உரித்து
தேயிலையின் விதைகளைத் தூவிய
என் மக்களின்
அவிழாத மௌனத்தோடு
மலைகளை ஆளும்
எங்களின் எஜமானர்கள்
அதிகாலை தெனீருக்காக
எம் குடிசைகள் மீது
தீ மீட்டுகின்றபோது
இன்னும்
தம்மினத்து மந்தைகளை
எங்களின் நிலமடியில்
வன்முறையின் சந்தங்களோடு
மேய்ச்சலிடுகின்றபோது..
நாய்களின் மொழியை
எங்களிடையே வீசுகின்ற போது
குடிசையின் தீ எம்மீது பரவும்
அக்கணம்
அதிகாரத்தின் உடுக்கொலியில்
மந்திரித்த நூல்கொண்டு
பூட்டிய விலங்குகளை
உடைத்தபடி
அடிமைகளின் விடுதலைக்குரல்களில்
உரசப்பட்ட தீக்குச்சிகளின்
நுணிபட்டு
பெரு வெடிப்போடு
அவிழும் எம் மௌனம்

