ඇයගේ කහට වැදුණු ඇඟිලි වලින් කෙනිත්ති….
තේ දළු, කූඩයට වැටෙයි.
කාලය හමුවේ ජීවත් වීමට ඇති බිය එලෙසමයි
තේ කූඩය පිරී ඇත්තේ ඇයගේ බැගෑපත්වූ ඉල්ලීම් වලිනි.
ඇයගේ වෙහෙසුන ගතෙන් හමා එන
ලේ දහදිය සුවඳ
මා කවියෙකු ලෙස ලොවට බිහිකලා
මාගේ ආත්මය තුළ සෑමවිටම හමන්නේ,
ඇයගේ තේ දළු සුවඳයි …
ඇයටත් දිනක් උදාවේවි ,
එවිට එම අඳුරු දවස් තරණය කර ආලෝකය වෙත පැමිනෙමි
එතෙක් අගේ දහදිය සුවඳ තැවරුණ මේ වදන් මතකයේ තබා ගන්න.
ආත්මය විවෘත කරගමු ,
ඇයගේ නොනිමෙන ආලෝකයෙන්,
අලුත් තරුවක් දකිමු.
———————-
அவளது கொழுந்து வாசம் வீசும் தேயா ஒளி
சண்முகம் சிவகுமார
அவளது தேயிலை காறைப் படிந்த விரல்கள்
கிள்ளி கூடைக்குள் விழும்
காலத்தின் முகத்தில்
வாழ்தல் மீதான பயம்
அப்படியே நீடித்து கிடக்கிறது.
அவளது நைய்ந்த இடிபாடுகள் நிறைந்த
கூடை சுமக்கும்
ஆதி உடலில் ஓடும் குருதி
மிகவும் தொன்மையானது.
அவளது மகத்தான தொன்மையான உழைத்த வியர்வை வாசம் மிகுந்த குருதி
என்னை எழுதுகோலாய் பெற்றது.
ஆதலால் என் ஆன்மாவிற்குள்
எப்போதும்
அவளது இளம் கொளுந்தின்
மணம் வீசுகிறது.
அவளது அந்த நாள் வரும்
அப்போது பொழிவிழந்த காலத்தை
தலை நிமிர்த்தி கடப்பேன்.
அப்போது அவளின் வியர்வை மணக்கும்
இந்த வார்த்தைகளை உங்கள் இதயத்தில் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் ஆன்மாவை திறந்து வைத்திருங்கள்
நாம் காண்போம்
நமது கண்களில் ஒரு புதிய நட்சத்திரத்தை
அவளது கொழுந்து வாசம் வீசும்
தேயா ஒளியோடு

